மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க வுக்கு ஆதரவு - ஜி.கே.வாசன் வாழ்த்து!!

 
tn

பாரதப் பிரதமராக  நரேந்திர மோடி  மூன்றாவது முறையாக பதவியேற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இந்திய நாட்டின் பிரதமராக 3 ஆவது முறை பதவியேற்ற திரு. நரேந்திர மோடி அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
பா.ஜ.க வானது மத்தியில் கூட்டணியுடன் ஆட்சி அமைப்பதால் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சியினரும் ஆதரவளித்து பா.ஜ.க வுக்கு பலம் சேர்த்து, மக்கள் நலன் காப்பார்கள். குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் வாழ்வில் மேம்பட மத்திய பா.ஜ.க அரசு பாடுபடும்.

GK Vasan
தேர்தல் நேரத்தில் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு மக்கள் முன்னேற்றம் அடைவார்கள், நாடும் வளம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும் உலக அளவில் இந்தியாவை வளம் மிகுந்த நாடாக, வலிமை மிக்க நாடாக, உலகம் போற்றும் நாடாக மாற்றுவார் நம் பிரதமர் அவர்கள். அந்த வகையில் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்றிருப்பதால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மத்தியில் தொடர்ந்து 3 ஆவது முறை ஆட்சி அமைக்கும் பா.ஜ.க வுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும். பா.ஜ.க வின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களுக்குமான நல்லாட்சியாக தொடரும் என்பதால் மத்திய அமைச்சர்கள் அனைவரையும் மனதார பாராட்டி, வாழ்த்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.