மோடியின் கையால் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் பழுது

 
அ

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் செங்குத்தாக தூக்கக்கூடிய தூக்கு பாலம் கடந்த ஒரு மூன்று ஆண்டுகளுக்கு மேல நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து, பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ரயில் சேவையையும் ராமேஸ்வரத்திற்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் மோடியின் கையால் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் சிறிது நேரத்திலேயே பழுதானது. புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை  கீழே இறக்க முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பாம்பன் பழைய தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தது.