"உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை..." - செல்வப்பெருந்தகை எம்எல்ஏ சாடல்!!

 
tn

மக்கள் விரோத அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

selvaperunthagai

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான அறிகுறிகள் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நம்பிக்கையோடு தென்படுகின்றன. மக்கள் விரோத அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மக்களவை தேர்தலுக்கு பிறகு அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து தேர்தல் பத்திர நன்கொடை உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க.வின் ஊழல்களையும் உச்சநீதிமன்ற கண்காணிப்போடு சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேர்தல் பரப்புரையாக இந்தியா கூட்டணி மேற்கொண்டு வருகிறது.

நமது பரப்புரையின் மூலம் உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை கிழிக்கப்படுகிற வகையில் கண் துஞ்சாது, அயராது செயல்பட வேண்டுமென தமிழகத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.