திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மோடி வழிபாடு

 
மோடி

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வழிபட்டார் பாரத பிரதமர் மோடி.

அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு முருகனின் முதல் 2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பெருங்குடி, அவனியாபுரம் வழியாக முருகனின் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது  பிரதமர் மோடிக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வாசலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வருகை தரும் பிரதமருக்கு  கம்பத்தடி மண்டபத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.