தவெகவின் சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள்- பிரதமர் மோடி

 
மோடி

தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தனது எக்ஸ் தளத்தில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு பாஜக பாடுபடும். தவெகவின்  சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக என்.டி.ஏ என்றும் உடனிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.