சென்னை வந்தது சொந்த ஊரில் இருப்பது போல உள்ளது: பிரதமர் மோடி

 
modi

தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்” என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி கடினமான நேரத்திலும் நாம் பலவீனம் அடையக்கூடாது என்று சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார். 

சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கிவைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “2024 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது. தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும். சென்னை வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது.

விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் இந்தியாவ் மாற்ற விரும்புகிறேன். 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது. கடினமான சூழல்நிலையில் கூட நாம் பலவீனமடையக் கூடாது. ஓடி ஒளியக் கூடாது. மனதை உறுதியாக வைத்துக்கொண்டு இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சியை தொடர வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அது உத்வேதம் அளிக்கும். நாடெங்கும் இருந்து சென்னை வந்திருக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.