நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

 
m

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறேன். மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டிய கனவை திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் தகர்த்துள்ளன. சுய நல அரசியல் செய்கின்றனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுக்கப்பட்டதை பெண்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள்; பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்கட்சிகள் எதிர்காலத்தில் விளைவுகளை சந்திக்கும். மகளிர் கவுரவத்தை காயப்படுத்தி உள்ளனர். மகளிர் சக்தியை எதிர்கட்சிகள் உதாசீனம் செய்துள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் பலன்பெறும்; ஆனால் எதிர்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.ஆதார், டிஜிட்டல் பண பரிவர்த்தனை என எந்தவொரு சீர்திருத்தத்தையும் காங்கிரஸ் விரும்புவதில்லை” என்றார்.