மீண்டும் மோடி ஆட்சி என்பது பகல் கனவு என்பதை இந்திய நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள்!!

 
K balakrishnan

பாஜக  மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது  பகல் கனவு என்பதை இந்திய நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

bjp

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டுவரலாமா என்று மோடி அரசு யோசிக்கிறது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்து, மாநில உரிமைகளுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை  நடத்த திட்டமிடுகிறார்கள். பொதுசிவில் சட்டத்திற்கும்  முயற்சிக்கிறார்கள். 


இப்படியான முயற்சிகளால் பாஜக அரசு தங்களை தக்க வைத்துக்கொள்வதோ, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரப்போவதோ நடைபெறப் போவதில்லை. அது பகல் கனவு என்பதை இந்திய நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள். ஏற்கெனவே பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில் பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.