'ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என சொல்லுவான்! உலக மகா நடிகன் அவன் யார்?' போஸ்டரால் பரபரப்பு

 
poster

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை சார்பில்  சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் கருவூலத்தின் சாவி 6 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக மோடி எவ்வித தரவுமின்றி பேசியுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை விமர்சிக்க பொதுப்படையாக 'தமிழ்நாடு' என குறிப்பிட்டு பேசிய மோடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

இந்நிலையில் மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், “தமிழ்நாட்டிற்கு வருவான் தமிழ் மொழியின் பெருமையை பேசுவான். திருவள்ளுவரை தெய்வம் என சொல்லுவான்... கர்நாடகா போவான் காவிரி பிரச்சனையை தூண்டுவான்...  ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என சொல்லுவான் - உலக மகா நடிகன் அவன் யார்?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.