தமிழகத்திற்கு ரூ.4,466 கோடியை அள்ளிக்கொடுத்த மோடி அரசு
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்களின் மூலதனச் செலவினங்கள் மற்றும் நலத்திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், மத்திய அரசு தனது மாதாந்திர வரிப் பகிர்வுத் தொகையான 1,09,019 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவித்துள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வரிப்பணத்தில் 1,09,019 கோடி ரூபாயை முன்கூட்டியே ரிலீஸ் செய்திருக்கிறார்கள். வழக்கமாக நவம்பர் 10 வர வேண்டிய பணத்தை நவம்பர் 5 அன்னைக்கே கொடுத்ததற்குப் பின்னால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பண்டிகை காலச் செலவுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த 1.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்தில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதப் பணத்தை 14 தவணைகளாக மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் உத்தரப் பிரதேசம் 19,208 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் இருக்கிறது. பீகார் 10,845 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசம் 8,010 கோடி ரூபாயும் பெற்றுள்ளன. ஆந்திரப் பிரதேசத்திற்கு 4,597 கோடியும், கர்நாடகாவிற்கு 4,504 கோடியும், தெலங்கானாவிற்கு 2,370 கோடியும், கேரளாவிற்கு 2,597 கோடியும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 4,466 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் கால் பங்கு கூட இல்லை. கோவா மற்றும் சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் தலா 400 கோடி ரூபாய்க்கும் குறைவாகப் பெற்றுள்ளன.

