குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

 
modi modi

மூத்த தலைவர் திரு. குமரி அனந்தன் மறைவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வானொலி என்றே தொடர வேண்டும்- குமரி அனந்தன் வேண்டுகோள் | kumari ananthan  request Radio should continue

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, "திரு குமரி அனந்தன் அவர்கள் சமூகத்திற்காக ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் காட்டிய ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி." எனக் குறிப்பிட்டுள்ளார்.