நவ.19ல் பிரதமர் தமிழகம் வருகை
Nov 12, 2025, 21:41 IST1762963909200
நவம்பர் 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()
கோவையில் நவம்பர் 19 முதல் 21 வரை இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 5000 விவசாயிகள் கலந்துகொள்கின்றனர். மேலும் இம்மாநாட்டில் மண் வளம், நச்சுத்தன்மை மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் மோடி சிறப்புரையாற்றுவதுடன், 50 வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் உள்ளார். இயற்கை விவசாயம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

