வெள்ளை வேட்டி அணிந்து பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு

 
மோடி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வெள்ளை வேட்டி, அங்கவஸ்திரம் அணிந்து சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. கையெடுத்துக் கும்பிட்ட படி கோயிலுக்குள் நுழைந்த அவர், கோயிலை சுற்றிவந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. 

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்வடைந்தது. பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் மோடி, புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ஜூன் 1-ஆம் தேதி மதியம் வரை இவர் தியானத்தில் ஈடுபட இருக்கிறார்.