விராட் கோலியின் உலக சாதனைக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
Virat Kohli modi

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Image

நடப்பு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50-வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.  ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம், உலகக்கோப்பை தொடர்பில் அதிக ரன்களை குவித்தது என்ற சச்சினின் 2 சாதனைகளை கோலி முறியடித்தார்.

ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார் விராட் கோலி. 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். 2003 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 673 ரன்கள் சச்சின் டெண்டுல்கர் எடுத்திருந்தார். அதுவே தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.இந்நிலையில் இன்றைய போட்டியில் 692 ரன்களை எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை விராட்கோலி முறியடித்திருக்கிறார். 

CM MK Stalin congratulates cricketer Virat Kohli

இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், விளையாட்டு திறனை வரையறுக்கும் விடாமுயற்சியையும் உணர்த்தி உள்ளார். விராட் கோலியின் அர்ப்பணிப்புக்கும் ஈடு இணையற்ற திறனுக்கும் சான்று எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நம்ப முடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக்கோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.