தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு!!

 
rain

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

rain

நாளை வட தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள், இராமநாதபுரம் ,சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தென்  தமிழக மாவட்டங்கள், நீலகிரி ,கோயம்புத்தூர் ,திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ,திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain

அதேபோல் 27 ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின்  ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும்  என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.