வலுவிழந்தது மோக்கா புயல்
May 15, 2023, 07:18 IST1684115297738

தீவிரப்புயலான மோக்கா புயலாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று முன்தினம் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர "மோகா" புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 0830 அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.