‘மோக்கா’ அதி தீவிர புயலாக நாளை கரையை கடக்கிறது

 
storm

தென்கிழக்கு வங்க தேசம்- வடக்கு மியான்மர் இடையே அதி தீவிர புயலாக நாளை கரையை கடக்கிறது மோக்கா புயல். 

rain

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயலின் வேகம் தற்போது 22 கி.மீட்டர் வேகமாக அதிகரித்துள்ளது. போர்ட் பிளேயருக்கு 610 கி.மீ. வடமேற்கிலும், வங்க தேசத்தில் காக்ஸ் பஜாருக்கு 510 கி.மீ. தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மோக்கா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 முதல் 190 கி.மீ.வேகத்திலும் இடையிடையே 210 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோக்கா புயலால் தமிழகத்திற்கு  எந்த விளைவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இதன் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 13( இன்று ) முதல் மே 16 வரை  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.