திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் பறிமுதல்
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனை கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்த திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும்போது தரிசன வரிசையில் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களிடம் செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். எனவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் தங்கி இருக்கும் அறைகளிலோ அல்லது பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டகங்களிலோ செல்போன்களை வைத்து விட்டு வருமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

