ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மநீம நிர்வாகி- ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆட்டோவில் பயணம் செய்த மநீம மகளிர் நிர்வாகி சினேகா மோகன் தாஸ் உடன், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தகராறில் ஈடுபடும் காணொலி வெளியானது.

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து மயிலாப்பூருக்கு ஆட்டோவில் சென்றுள்ளார் மக்கள் நீதி மய்ய நிர்வாகி சினேகா மோகன் தாஸ். அப்போது ஆட்டோ ஓட்டுநர் கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு, வேறு பாதையில் சென்றுள்ளார். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. புக்கிங் ஆப்பில் மேப்பை அணைத்துவிட்டு ஆட்டோவை இயக்கியதால் தட்டிக்கேட்டதால் கீழே இறங்குமாறு ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த சினேகா, நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரை ஆட்டோ ஓட்டுநரும் தாக்கினார்.
சென்னை: சைதாப்பேட்டையில் இருந்து ஆட்டோவில் பயணம் செய்த மநீம மகளிர் நிர்வாகி சினேகா மோகன் தாஸுக்கு, ஆட்டோ ஓட்டுநருடன் தகராறு. ஆட்டோ ஓட்டுநர் தன்னை தாக்கியதாக கூறி, அவரை செருப்பால் அடித்ததால் பரபரப்பு. சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை.#SnehaMohanDas | #MNM |… pic.twitter.com/eechC6cHlb
— PttvOnlinenews (@PttvNewsX) July 21, 2025
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சினேகா மீது தாக்குதல் தொடர்பாக 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர் பிரசாத் என்பவரை கைது செய்தனர். மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி - ஆட்டோ ஓட்டுநர் மாறி மாறி தாக்கிய வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


