எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவு: த.வெ.க. சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.!!
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக த.வெ.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
— TVK Party HQ (@TVKPartyHQ) November 19, 2026

