வெற்றி துரைசாமி மறைவுக்கு எம்எல்ஏ வேல்முருகன் இரங்கல்!!

 
velmurugan

வெற்றி துரைசாமி மறைவுக்கு வேல்முருகன் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனித நேயம் அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான திரு.சைதை துரைசாமி . அவர்களின் மகனும் திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.


அவரை இழந்து வாடும் அவரது தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும்,நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.