திமுக அவைத்தலைவரை ஓங்கி அறைந்த எம்.எல்.ஏ! அதிர வைக்கும் வீடியோ வைரல்
கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ, ஒன்றிய திமுக அவைத்தலைவரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய திமுக அவைத்தலைவராக இருந்து வருபவர் முனிவேல். அண்மையில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திமுக நிர்வாகிகளை அழைக்காமல் முன்னாள் மாவட்ட செயலாளரரான திமுக எம்எல்ஏவை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்துவது ஏன் என ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், ஒன்றிய செயலாளர் சக்திவேலிடம் முறையிட்டுள்ளார். பின்னர் கட்சி நிர்வாகிகள் இனி அனைவரையும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்திருந்தனர். திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராள்ளப்பாடி ஊராட்சியில் கோலப்போட்டி நடைபெற்றது.
திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேலின் கன்னத்தில் ஓங்கி அறைந்த எம்.எல்.ஏ கோவிந்தராஜன்!
— R.PALANINATHAN (@palaninathan_r) January 5, 2026
'கொள்கை பிடிப்புள்ள கட்சி', 'அரசியல்படுத்தப்பட்ட இயக்கம்' என மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் உண்மை முகம் இதுவே. தலைமை முதல் கிளை வரை, அனைத்து மட்டத்திலும் திமிரும், அடக்குமுறையும், சாதிய வன்மமும் pic.twitter.com/i9unmuduTK
இந்தக் கோலப்போட்டியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ்ராஜ், கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பாக ஒன்றிய செயலாளரிடம் முறையிட்ட அவை தலைவர் முனிவேலை கண்டித்து கன்னத்தில் அறைந்து தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மாவட்ட செயலாளரும், திமுக எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்து ஆவேசமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


