எம். எல். ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது பாலியல் துன்புறுத்தல் - நீதிபதி பரபரப்பு பேச்சு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்.
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது, அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்ட நிலையில், விக்டோரியா கெளரியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

