”இன்னைக்கு மேயர் பிரியா வர ப்ளாணே இல்ல.. என்ன இன்சல்ட் பண்றதுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க”- எம்.எல்.ஏ. பல்லவி
என்ன நடந்தது? தவெக எம்எல்ஏ பல்லவி விளக்கம்
புளியந்தோப்பில் நடந்த பள்ளிக் கட்டிடம் திறப்பு விழாவில், விளக்கேற்றும் போது மேயர் பிரியா வேண்டுமென்றே என்னை புறக்கணித்தார் என தவெக எம்எல்ஏ பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக எம்எல்ஏ பல்லவி, “முதலில் மேயர் பிரியா நிகழ்ச்சியில் பங்கேற்கும் திட்டமே இல்லை; பின்னர் வந்து அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார்கள். புளியந்தோப்பில் நடந்த பள்ளிக் கட்டிடம் திறப்பு விழாவில், விளக்கேற்றும் போது மேயர் பிரியா வேண்டுமென்றே என்னை புறக்கணித்தார். அவர் விளக்கேற்றியவுடன், மெழுகுவர்த்தியை அப்படியே துணை ஆணையரிடம் கொடுத்தார். அதன்பின் வார்டு கவுன்சிலரிடமும் கொடுத்துவிட்டார். முதலில் அவர் வேண்டுமென்றே செய்தார் என்று நான் நினைக்கவில்லை, கூட்ட நெரிசலில் ஏதோ மறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால், இரண்டாவது முறையும் அவர் இதையேதான் செய்தார். நான் மெழுகுவர்த்தியை வாங்கக் கையை நீட்டியபோதும் அவர் என்னிடம் கொடுக்கவில்லை. அப்போதுதான் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்று தெரிந்தது. உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டேன். மேயர் பிரியா அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொண்டார்” என்றார்.

