எம்.எல்.ஏ. மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி
விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவில்பட்டி தி.மு.க. கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர்உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்... சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய்... சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம்” என்று முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினார். முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்கண்டேயனின் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார். அதே சமயம் அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து அனுமதிக்கக்கோரி காவல்துறை தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மனுக்களையும் தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

