எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு சிறை!!

 
tn

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கைது

தலைமறைவான இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஆந்திராவில் வைத்து  இருவரையும் தனிப்படை கைது செய்தது.

இந்நிலையில் வீட்டு வேலைக்குச் சென்ற இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.