சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ. செய்த செயலால் அவையே கலகலப்பானது! என்ன நடந்தது?
தமிழகத்தின் 17-வது சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் பேரவையின் தற்காலிக சபாநாயகரும், அடுத்ததாக முதல்வர் விஜயும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று உறுதிமொழி எடுத்தனர்.
அப்போது த.வெ.க-வின் வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார். பேரவையில் உறுதிமொழி எடுப்பதற்கு, பக்கத்தில் இருந்தவரின் வெற்றிச் சான்றிதழை எடுத்துச் சென்றார். இதனை கண்டுபிடித்த முதன்மைச் செயலாளர் அவரிடம் தெரிவித்ததும், சரியான சான்றிதழை கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | பேரவையில் உறுதிமொழி எடுப்பதற்கு, பக்கத்தில் இருந்தவரின் வெற்றிச் சான்றிதழை எடுத்துச் சென்ற வேளச்சேரி தவெக எம்.எல்.ஏ. குமார்.
— Sun News (@sunnewstamil) May 11, 2026
இதனை கண்டுபிடித்த முதன்மைச் செயலாளர் அவரிடம் தெரிவித்ததும், சரியான சான்றிதழை கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.#SunNews | #TNAssembly | #TVK pic.twitter.com/PN43PJvTHu

