அம்மா உணவகத்தில் தோசை- ரீல்ஸா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
Jun 22, 2026, 16:59 IST1782127740213
அம்மா உணவகத்தில் ஆய்வு செய்வதுபோல் தவெக எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எடுத்த ரீல்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஏன்டா திமிங்கலம் அம்மா உணவகத்தில் தோசை இல்ல இவங்க எப்படி தோசை திங்கிறாங்க...
— Purushoth (@Purushoth950016) June 22, 2026
இவணுங்களா கேவலப்படுத்து எவனும் வேண்டாம் இவனுங்களே போதும் பைத்தியகாரணுங்க. pic.twitter.com/xTYfCZ4u1C
பொதுவாக அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இட்லி, பொங்கல் போன்றவையே விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகத்தில் தோசை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் கம்பம் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, வெளியில் இருந்து தோசை வாங்கி வந்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ரீல்ஸ் எடுத்துள்ளார். அம்மா உணவகத்தில் தோசை கிடையாது, த.வெ.க எம்எல்ஏவுக்கு மட்டும் எங்கிருந்து தோசை வந்தது? ரீல்ஸ் ஆட்சியில் இருந்து எப்போதுதான் தவெக அரசு விழிக்கும்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

