“ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவித்திடுக”- மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Mar 13, 2026, 21:35 IST1773417942000
ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் (கட்டம் 3) பணிகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து நிதி வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். ஒன்றிய அரசு குறைவான நிதி விடுவித்த போதிலும், உரிய காலத்தில் இத்திட்டத்தினை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2,550 கோடியை விடுவித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

