மணிஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவியுங்கள்! மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

 
stalin modi stalin modi

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

மணிஷ் சிசோடியா கைது: பிரதமருக்கு 8 கட்சிகள் கடிதம், ஒதுங்கிக் கொண்ட காங்கிரஸ்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு,  சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது.   இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக  சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில்,  இதில்  அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு  தொடர்பு இருக்கலாம் எனவும்  சிபிஐ சந்தேகிக்கித்தது.   இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  சிசோடியாவுக்கு  சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து,  டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்நிலையில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில் குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன. வேறுபட்ட கொள்கைகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயத் துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.