“வாடி ராசாத்தி”.... முதல்வர் மகளிர் தின வாழ்த்து
வெல்லும் தமிழ்ப் பெண்களே...நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வெல்லும் தமிழ்ப் பெண்களே...
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 8, 2026
நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின்… pic.twitter.com/YGyJFVRWiJ
திமுக அரசின் புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், காலை சிற்றுண்டித்திட்டம் உள்ளிட்டவற்றின் பயனால் பெண்களின் நிலை ஏற்றம் கண்டுள்ளது என்பதை விளக்கும் காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வெல்லும் தமிழ்ப் பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது! தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

