எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு திரும்பிய இளைஞருக்கு முதல்வர் வாழ்த்து

 
MK Stalin

சென்னை, கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை(27) என்ற இளைஞருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழர்.. பனி, குளிரை வென்று சாதித்த கோவளம்  இளைஞர்.. யார் இந்த ராஜசேகர்? | 27 old youth Rajasekar the first person from  Tamil nadu reaches mount ...

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), மே 19 ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை கொண்ட முதல் தமிழன் என்ற பெருமையை ராஜசேகர் பச்சை பிடித்துள்ளார். இந்த செய்தி டிவிட்டரில் வைரலானதை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜசேகர் அலைச்சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளாவில் பல வெற்றிகளை குவித்தனர். தற்போது மலையேற்றத்தில் அசத்திவருகிறார்.


இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.