“பிரக்ஞானந்தா! உங்கள் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்கிறது"- ஸ்டாலின்

 
உலக சதுரங்க வாகையாளரை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா.. ஓபிஎஸ் பாராட்டு..

நார்வே செஸ் போட்டியில் உலகின் முதல் இரண்டு வீரர்களான கார்ல்சன், பேபியானோ கருனாவை வென்றதற்காக பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Praggnanandhaa Tamil Nadu chief minister MK Stalin

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்லசனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் 'கிளாசிக்கல் செஸ்' வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.

டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும், பிரக்ஞானந்தா! ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.