அரசுப் பள்ளியில் படித்து ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக சாதித்த நிகர் ஷாஜிக்கு ஸ்டாலின் வாழ்த்து

 
mkstalin

ஆதித்யா எல்-1  திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி  அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Niger Shaji

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் தளத்தில், “தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான  ஆதித்யா எல்-1  திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி  அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து  சந்திரயான்  முதல்  ஆதித்யா  வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். 



இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.