சவாலான சூழல்களிலும்... டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

 
mkstalin

இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Image

20 அணிகள் பங்கேற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அமரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற பல அற்புதமான ஆட்டங்களை கடந்து இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.


இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முழுமையான ஆதிக்கத்துடன், நம் இந்திய அணி வீரர்கள் இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளதைக் கொண்டாடுவதில் உற்சாகமடைகிறேன். சவாலான சூழல்களிலும் இணையற்ற அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திய நமது இந்திய அணி, தோல்வியே காணாமல் உலகக் கோப்பைத் தொடரை நிறைவுசெய்துள்ளது. இந்திய அணிக்குப் பாராட்டுகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.