லண்டன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்! திடீரென வெளியான அறிவிப்பு

 
MK stalin MK stalin

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர்  மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதியில் லண்டன் செல்கிறார்.

Stalin to visit UK, Japan after May 20 to attract investments'

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, முதல்வர் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த காலங்களில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம் மாத இறுதியில் லண்டன் செல்ல உள்ளார்.  இம் மாத இறுதியில் லண்டன் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 7 நாட்கள் வரை லண்டனில் தங்கி இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.