முதலீட்டாளர் மாநாட்டுக்கு தயாராகிறேன் - முதல்வர் ஸ்டாலின்

 
mkstalin america

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு தயாராகிறேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - தமிழர்கள் கொடுத்த உற்சாக  வரவேற்பு – News18 தமிழ்

தமிழ்நாட்டுக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தின் மதிப்பு  ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராக (ஒரு லட்சம் கோடியாக ) உயர்த்தப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில்  சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.  தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற  தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ல் முதலீடுகள் மற்றும் முதலீடுகளுக்கான தொடக்கம் என சேர்த்து  மொத்தமாக 68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது.  இந்த நிலையில் பொருளாதார இலக்கை எட்டுவதன்  ஒரு பகுதியாக சுமார் 17 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.


இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் விறுவிறுப்பான நடைபயணத்துடன் இன்றைய நாள் தொடங்கியுள்ளது என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகி வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.