'எல்லார்க்கும் எல்லாம்’- தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் குறித்து தமிழக முதல்வர் வீடியோ வெளியீடு

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…#DravidianModel #TNBudget2025 pic.twitter.com/83ZBFUdKZC
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
இந்நிலையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… அனைத்து மக்களின் வளர்ச்சிக்குமான, தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26..! என்ற வீடியோவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “எல்லார்க்கும் எல்லாம்” என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை கட்டமைப்புகளை கொண்ட, அனைத்து நிலை வளர்ச்சிக்குமான பட்ஜெட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.