"Policy, Action இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு"- மு.க.ஸ்டாலின்
எதிர்காலச் சந்ததியினர் வாழப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நமது அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “#ClimateChange: Policy, Action – இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு! துறையின் பெயரிலேயே காலநிலை மாற்றத்தைச் சேர்த்தது தொடங்கி, முன்னெப்போதும் இல்லாத அளவில் 500 கோடி ரூபாயை ஒதுக்கிப் பல இயக்கங்களைச் செயல்படுத்துவது வரை #DravidianModel அரசின் #ClimateChange செயல்பாடுகள்தான் இந்தியாவுக்கு Blueprint!
#ClimateChange: Policy, Action – இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 17, 2025
துறையின் பெயரிலேயே காலநிலை மாற்றத்தைச் சேர்த்தது தொடங்கி, முன்னெப்போதும் இல்லாத அளவில் 500 கோடி ரூபாயை ஒதுக்கிப் பல இயக்கங்களைச் செயல்படுத்துவது வரை #DravidianModel அரசின் #ClimateChange… pic.twitter.com/nRfUhFMBW5
2070-க்கு முன்னரே #NetZeroEmission இலக்கை அடைய வேண்டும் என அனைத்து நிலைகளிலும் உழைத்து வருகிறோம்! அதனால்தான் ஐ.நா.வே நம்மைப் பாராட்டியுள்ளது! இது ஒரு நீண்டகாலப் பயணம் என்றபோதிலும், நமது முயற்சிகளின் விளைவாகப் பல உடனடிப் பயன்கள் மூன்றாண்டுகளாகக் கிடைத்து வருகின்றன. எதிர்காலச் சந்ததியினர் வாழப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நமது அரசு உறுதியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


