விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கினேன்- மு.க.ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
மரியாதை நிமித்தமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார் முதல்வர் விஜய். முதல்வர் விஜய்யை வீட்டு வாசலில் ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் மு.க.ஸ்டாலின்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 11, 2026
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.@TVKVijayHQ @Udhaystalin pic.twitter.com/aTmmqpoPtP
இச்சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

