“என் சகோதரிகளுக்கான எனது திட்டங்கள் #DravidianModel 2.0-விலும் தொடரும்”- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

 
MKstalin MKstalin

"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

Image

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “திராவிட மாடலால் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்: மெய்சிலிர்க்க வைத்த மேடை

பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் முன்னிற்பது, பேருந்துகளை இயக்குவது, #ISRO-வில் செயற்கைக்கோளை ஏவுவது, மருத்துவமனைகளில் உயிர்காப்பது, கல்வியிலும் விளையாட்டிலும் சாதிப்பது, அரசின் உயர் பொறுப்புகளை நிர்வகிப்பது என எங்கும் நீக்கமற நிறைந்து, தமிழ்நாடு எனும் சக்கரத்தைச் சுழல வைப்பது பெண் எனும் பேராற்றலே!


#DravidianModelEra என்பது மகளிர் முன்னேற்றத்தின் Golden Era என வரலாறு பதிவு செய்யும்! என் சகோதரிகளுக்கான எனது திட்டங்கள் #DravidianModel 2.0-விலும் தொடரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.