டங்ஸ்டன் விவகாரம்- மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்தது: மு.க.ஸ்டாலின்

 
mkstalin

மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. 

இச்செய்தியை எக்ஸ் தளத்தில் மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின்  உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது! இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.