“உள்ளன்போடு உரையாடிய ஓபிஎஸ்”- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

 
அச் அச்

உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். முன்னதாக முதலமைச்சர் காலை அடையாறு பூங்காவில் நடை பயிற்சி செய்தபோது, அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். உடல்நிலை குறித்து முதலமைச்சரிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதலமைச்சருடன் அவர் என்ன பேசினார் என்ற விபரம் வெளியாகவில்லை. இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நேரில் சந்தித்தார். அவரை வாசல் வரை சென்று உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.


இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.