“தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில்..”- மு.க.ஸ்டாலின்

 
MKstalin MKstalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Image


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.