நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.

MK Stalin Condoles Landslip Deaths In Tamil Nadu, Announces Rs 5 Lakh  Compensation

இன்று (23-06-2025), NEET UG 2025 தேர்வில் முறைகேடு செய்து, ரூ.90 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது CBI வழக்கு பதிவு செய்துள்ளது.. இந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.