மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்- மு.க.ஸ்டாலின்

 
மம்தா ஸ்டாலின்

மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து | CM MK Stalin wishes  mamata banerjee birthday

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானது. பர்த்வான் மாவட்டத்தில்  இருந்து கொல்கத்தாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மம்தா பானர்ஜியின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென நிறுத்தப்பட்டது. இதில் அவருக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. முதல்வரின் கான்வாய்க்கு முன்னால் கார் ஒன்று திடீரென வந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே மம்தாவின் கார் ஓட்டுனர் பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


இந்த விபத்துக்கு வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி சென்ற கார் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். காயமடைந்த அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.