“கல்வியில் சிறந்த தமிழ்நாடு”- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்கள், சாதனைகளை முன்னிலைப்படுத்தி கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா 7 பகுதிகளாக நடைபெறவுள்ளது. அதன்படி
புதுமைப்பெண் திட்டம்: அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் திட்டம் (மாதம் ரூ.1000).
நான் முதல்வன் திட்டம்: படித்த இளைஞர்களை, பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பும் தகுதியானவர்களாக மாற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பசியின்றி பள்ளிக்கு வா, அறிவொளி பெற்றுப் போ! - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புரட்சித் திட்டம்.
தமிழ்ப்புதல்வன் திட்டம்: அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் திட்டம் (மாதம் ரூ.1000).
இல்லம் தேடிக் கல்வி: கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க, தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று கல்வி வழங்கும் திட்டம்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
— Top Tamil News (@toptamilnews) September 25, 2025
தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ.#MKStalin #AnbilMahesh #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு pic.twitter.com/65ffxBf6fA
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை திட்டம்: SC/ST மாணவர்கள், உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில நிதியுதவி வழங்கும் திட்டம்.
உயர்வுக்குப் படி திட்டம்: 12-ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதை உறுதிசெய்து, அவர்களுக்கு வழிகாட்டும் திட்டம்.
வெற்றி நிச்சயம் திட்டம்: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை இலவசமாக வழங்கும் திட்டம்.

