“இந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்”- நெகிழவைத்த மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழக்க அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகளை போனில் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025
🗞️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி,… https://t.co/y3Oor4mTLA
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது #DravidianModel அரசு துணை நிற்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


