உலகத்தரத்தில் திறக்கப்பட்டுள்ள பூங்காவை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்- மு.க.ஸ்டாலின்

 
ம்க்

தலைநகரின் பெருகும் தேவைகளை உணர்ந்து அரசு உருவாக்கியுள்ள உலகத்தரத்திலான பசுமைப் போர்வையினைத் தூய்மையாக வைத்துக்கொள்ள மக்கள் உதவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Image

சென்னை கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் 45 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தேனீ வளர்ப்பு,பட்டு வளர்ப்பு முறை, பாரம்பரிய தோட்டக்கலைத் துறை சார்ந்த பொருட்கள் அடங்கிய உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம் AC வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 500 மீட்டர் நீளம் உடைய 'ஜிப்லைன்' (கயிற்றில் தொங்கி செல்லும் சாகசம்) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜிப்லைன் சாகச பயணம் செல்ல பெரியவர்களுக்கு 250, சிறியவர்களுக்கு 200,குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல 150 ரூபாய் நிர்ணயிக்கபட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவு பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்ட பாதை.2,600 சதுரஅடி பரப்பிலான ஆர்க்கிட் குடில், வெளிநாட்டு பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று
உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Image

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ பள்ளிக்கரணை சதுப்புநிலச் சூழலியல் பூங்கா, செனாய் நகரில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்கா, கிண்டி சிறுவர் இயற்கைப் பூங்கா எனச் சென்னையின் நுரையீரலுக்குப் புத்துணர்ச்சியூட்டி வரும் நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளுக்கு மகுடமாக #KalaignarCentenaryPark அமைந்துள்ளது! தலைநகரின் பெருகும் தேவைகளை உணர்ந்து அரசு உருவாக்கியுள்ள உலகத்தரத்திலான இப்பசுமைப் போர்வையினைத் தூய்மையாக வைத்துக்கொள்ள மக்கள் உதவ வேண்டும்! #கலைஞர்_நூற்றாண்டுப்_பூங்கா” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.