“நான் மோடியை சந்திக்க செல்லவில்லை... ஆனால் மனு மட்டும் போகும்”- மு.க.ஸ்டாலின்

 
s s

தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பினார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் கனிமொழி எம்பி, தலைமை செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மருத்துவமனையில் இருந்தபடியே ஆலோசனை நடத்தும் வீடியோ ஒன்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.